திருகோணமலையில் மத சகவாழ்வுக்கான செயலமர்வு முன்னெடுப்பு

-கிண்ணியா நிருபர்-

இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் சேவிங் ஹியூமானிட்டி பவுண்டேஷன் இணைந்து திருகோணமலை பிரதேச சர்வ சமயக் குழுவின் மாதாந்த செயலமர்வு புதன்கிழமை திருகோணமலை மாவட்ட சர்வோதய மண்டபத்தில் நடை பெற்றது.

இச் செயலமர்வில் சர்வசமயப் பெரியவர்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோ சுத்தர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலானது மத ஒற்றுமையை வலுவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டது.