திருகோணமலையில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

-திருகோணமலை நிருபர்-

 

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) , அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் காயம் அடைந்த இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.