திருகோணமலையில் தமிழ்ச்சங்க பெருவிழா : தொன்மை மிகு பொருட்களை தந்துதவுமாறு கோரிக்கை!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தமிழ் சங்கத்தினால் எதிர்வரும் ஜீன் 10ஆம் திகதி அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள வசந்தப் பெருவிழாவில், நூற்கண்காட்சிக்காக திருகோணமலை சம்பந்தமான கல்வெட்டு ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் ஆய்வு நூல்கள் உள்நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் வெளியீடு செய்யப்பட்ட இலக்கிய நூல்கள் வைத்திருப்போர், அவற்றைத் தந்துதவினால் மேற்படி கண்காட்சியை சிறப்பாக நடாத்துவதற்குப் பேருதவியாக அமையும் என ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.
பெற்றுக் கொள்ளும் சகல ஆவணங்களும், மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பதை கூறிக் கொள்கின்றோம், எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்
மர்ளியா சக்காப் 0760691051
ந. யோகேஸ்வரன்-நூலகர் திருகோணமலை 0703827660
பானு சுதாகர்-திருகோணமலை 0773556563