திருகோணமலையில் சர்வதேச நீர் தின நிகழ்வு

-மூதூர் நிருபர்-

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை -சேருநுவர தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை உலக நீர் தின நிகழ்வு இடம்பெற்றது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் மூதூர் பிராந்திய காரியாலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

நீர் தின நிகழ்வில் மூதூர், சேருநுவர பிரதேச பாடசாலை மாணவர்களிடையே சித்திரம், வினாவிடை போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ல் நீர்பாசன திணைக்கள திருகோணமலை பிரதம பொறியியலாளர், வெருகல் பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன திணைக்கள மூதூர் பிராந்திய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.