
சாமர்த்தியமாக கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து பொலிஸாரிடம் பாதுகாப்பாக சரணடைந்த மாணவன்
காணாமல் போன, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே. எம். லாஹீரின் மகன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட போது, அவர்களிடமிருந்து தப்பிச் சென்று, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக இருப்பதாக, சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான மாணவன், நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்.
சமுத்திரகம பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்த மாணவன், காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.
மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
திருகோணமலையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
