
திருகோணமலையில் அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை வெள்ளைமணல் அல்-அஷ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், அதிபரை இடமாற்றுமாறு கோரி அப்பாட சாலையில் கல்வி கற்கும் மாணவர்களால், இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வயது வந்த மாணவ மாணவிகளுக்கு, அதிபர் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தே, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சீனக்குடா பொலிஸார், அதிபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் பாடசாலை வளாகத்திற்கு செல்லுமாறும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, மாணவர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை வலய கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு தெரியாது என்றும் தற்போது கொழும்பில் விஷேட கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


