திருகோணமலையிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்-

கோட்டா -ரணில் ஆட்சியை விரட்டி அடிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலையில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை அபயபுர சுற்று வட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தற்பொழுது ஆட்சியில் உள்ளவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதே வேளை கோமரங்கடவல- மொரவெவ மஹதிவுல்வெவ கந்தளாய் போன்ற பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.