திருகோணமலையிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை!

 

-கிண்ணியா நிருபர்-

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேசர் யாத்திரிகர் சபையினால் கதிர்காம பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை  காலை திருகோணமலையிலிருந்து பல கோயில் தரிசனங்களுடன் ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரையில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்