தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு: இளைஞர் கொலை
இந்தியாவில் சென்னை ஓட்டேரியில் இளைஞரை கொலை செய்து விட்டதாகக் கூறி 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலமானது செங்கை சிவம் மேம்பாலம் அருகே உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டு நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மேலும் தொடர் விசாரணையில், தியேட்டரில் ராயன் படம் பார்க்கும் போது முன்னாள் அமர்ந்திருந்த குறித்த இளைஞர் மீது பின்னால் அமர்ந்திருந்த இம்ரான், முகமது கலீலின் கால் பட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாதானம் பேசலாம் என குறித்த இளைஞரை அழைத்து வந்து மது அருந்திய போது இம்ரானின் தாயார் குறித்து இளைஞர் அவதூறாக பேசியதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
