தியவன்னா ஓயாவில் பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையம்

பத்தரமுல்ல பகுதியில் உள்ள தியவன்னா ஓயாவின் இரு கரைகளையும் உள்ளடக்கிய பகுதியில், பொதுமக்களுக்கான பிரம்மாண்ட பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர வலயத்தை உருவாக்க நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மொத்தம் 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 9 நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சர்வதேச போட்டி விலைமனு கோரல் (International Competitive Bidding) மூலம் இதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த 9 நிலப்பகுதிகளும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே பத்தரமுல்ல சதுப்புநிலப் பகுதியில் சில பணிகளை நிறைவு செய்துள்ளது.

தியவன்னா ஓயாவை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன.

‘வோட்டர்ஸ் எட்ஜ்’ (Waters Edge) ஹோட்டலைச் சுற்றியுள்ள நீர்வழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.