தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று புதன்கிழமை அரச பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மனு ஊடாக முன்வைத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வழக்குப் பொருட்கள், இரத்த மாதிரிகள் உள்ளிட்டவற்றின் உரிய அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம் வழங்கிய அறிவித்தலின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்