தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு?

தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படலாம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம், எனவே அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உறுதிப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார்.