
தினசரி மின்வெட்டு தொடருமா?
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்று ஜெனரேட்டர்கள் மீள செயற்படுத்த எதிர்பார்ப்பதாக, இலங்கை மின்சார சபை செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அதுவரை, தற்போதைய மின்வெட்டு அட்டவணை தொடரும்.
இருப்பினும், விடுமுறை மற்றும் குறைந்த மின்சார தேவை காரணமாக புதன்கிழமை மின்வெட்டு இருக்காது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கான மின்வெட்டு குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரி மேலும் கூறினார்.
