திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவுகொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
