திடீர் மாரடைப்பு: பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மயங்கிய சாரதி

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய பின்னர் இருக்கையில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் பயணிகள், சாரதியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட பின்னரும், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய சாரதியை, பயணிகள் மற்றும் யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் சிரேஷ்ட அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.