திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
மத்துகம – மீகத்தன்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வெளிக் கடமையில் ஈடுபட்டுத் திரும்பும் போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 58 வயதான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
