திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாத குழந்தை ஒன்று யாழ். – கொடிகாமம் தவசிக்குளத்தடியில் உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் காய்ச்சல் ஏற்பட்டதால் பனடோல் வழங்கப்பட்டது.
எனினும் காய்ச்சல் அதிகமானதால் பிற்பகல் வேளையில் மிருசுவில் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
மேலதிக சிகிச்சைக்காக குழந்தை அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
