
திடீர் ஒவ்வாமையால் 14 வயது மாணவியின் பரிதாபம்
கொழும்பு பகுதியில் நேற்று புதன் கிழமை ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம, முல்லேகம பகுதியைச் சேர்ந்த தினிதி திமாரா என்ற (வயது – 14) பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தோழி ஒருவருடன் மாடியில் படித்துக் கொண்டிருந்த போது, “அம்மா கை கொஞ்சம் வலிக்குது” என்று தாயிடம் கூறியுள்ளார். பின்னர், திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்த அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவெல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
