திடீரென வீதியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிபிலேகம வீதியில் பயணித்த ஒருவர் இன்று புதன்கிழமை காலை வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நமுனுகுல, வெவேகெலே கீழ் பிரிவில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் பசறை பிபிலேகம வீதியில் பயணித்த போது திடீரென கீழே விழுந்ததாகவும் அதன் பின்னர் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்