திடீரென துப்பாக்கி இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

மொனராகலை – ஒக்கம்பிடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் துப்பாக்கியை பராமரிக்கும் செயற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முற்பகல் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கி இயங்கியுள்ளது.

இதன்போது, அருகில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.