திடீரென தாழிறங்கிய பிரதான வீதி

கினிகத்தேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 08 மணியளவில் ஹட்டன் – கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக மேலும் இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்