திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றது.