
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : 08 குடும்பங்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பி வைப்பு
-பதுளை நிருபர்-
எல்ல வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பிரதேசத்தில் வீதிக்கு மேலே இன்று திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 08 குடும்பங்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
குறித்த பகுதியில் வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக வீதிக்கு மேல் மற்றும் கீழ் பகுதி இடிந்து விழுந்துள்ளது.
வெளியேற்றப்பட்ட எட்டு குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் போத்திருக்கராம விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள ஆறு குடும்பங்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
