
திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் பலி
அங்குனகொலபெலஸ்ஸ வீதியிலுள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பீப்பாய் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
