திங்கள் முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறை ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் நாட்டை சிலவாரங்கள் பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு தேவையா என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்துள்ள நிலையில் இதற்கான தேவையில்லை என பதிலளித்துள்ளனர்.

இந்தநிலையில் திங்கள்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.