தாலிபான் நிர்வாகம் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை: மலாலா

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் நிர்வாகம் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை எனவும் அடக்கு முறை கொள்கைகளை அதிக அளவில் பிரயோகிப்பதாகவும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண் கல்வி குறித்து பாகிஸ்தான் நடத்திய சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செயல்பாட்டினை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில், சர்வதேச முஸ்லிம் தலைவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.