தாய்மாமன் உயிரிழந்த கவலை: மருமகன் தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் தினேஸ் (வயது – 31) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ள நிலையில் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து, வீட்டுக்கு பின்னால் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்