
தாய்ப்பால் புரையேறி உயிரிழந்த 9 மாதக் குழந்தை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் தாய்ப்பால் புரையேறி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மதன் மௌலீஸ் எனும் 09 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாய்ப்பால் அருந்திய பின் குழந்தை உறங்கியுள்ளது. அதன்பின் தொடர்ந்தும் குழந்தை அசைவற்று இருப்பதை அவதானித்த தாயார் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
