தாயை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற மகன் : பசியால் பிளாஸ்டிக் உறைகளை உண்ண முற்பட்ட தாய்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுகயீனமுற்ற தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா நிகழ்விற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தனிமையில் விடப்பட்டு, வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய 68 வயதான மூதாட்டி, பிளாஸ்டிக் உறைகளைச் சாப்பிட முற்பட்ட போது அயல் வீட்டாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.