தாயை கொலை செய்ய திட்டம் தீட்டிய 13 வயது சிறுமி!

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறுமி ஒருவர் தாயார் தனது தொலைபேசி பயன்பாட்டை கண்டித்தமைக்காக அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அகமதாபாத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவரையே அவரது 13 வயது மகள் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இவரது வீட்டில் சில காலமாகவே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் நிகழ்ந்து வந்துள்ளது. சமையல் அறையில் இருந்த சீனி பெட்டியில் யாரோ பூச்சி மருந்தை கலந்து வைத்துள்ளனர்.
அதேபோல, பாத்ரூமில் வழுக்கி விழும் விதமாக அங்கு அடிக்கடி தரை சுத்தம் செய்யும் திரவம் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் உதவி மையத்தை அவர் நாடியுள்ளார்.

அதன் பின்னர் அவர்களால் நடாத்தப்பட்ட விசாரணையின் போது இந்த பெண்ணின் மகளே இவ்வாறு தாயை கொலை செய்ய முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி செல்போன் பழக்கத்திற்கு தீவிர அடிமையாகி உள்ளார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது அல்லது நண்பர்களுடன் சேட்டிங் செய்வது என இருந்துள்ளார். இதனால், இவரின் பழக்க வழக்கம் மோசமாகியுள்ளது. இதனால் கவலை கொண்ட தாய் தொலைபேசி வாங்கி எடுத்துள்ளார்.

இது சிறுமியை மேலும் மூர்க்கமாக்கியுள்ளது. தனக்கு தாய் செல்போன் தராத ஆத்திரத்தில் தான் அவரை பழி தீர்க்க வேண்டும் என சர்க்கரை டப்பாவில் பூச்சிமருந்தை கலந்தும்இ பாத்ரூமில் திரவத்தை ஊற்றியும் சதி வேலை செய்துள்ளார்.

விசாரணையில் வெளியான தகவலை கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மனநல ஆலோசகர்கள் கவனத்துடன் சிறுமிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.