தாயையும் சகோதரனையும் கத்தியால் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்!

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கத்தியால் வெட்டியதில் அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகிய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற அனுமதியுடன் மனநல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.