தாயாரை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!
இந்தியாவில் பெங்களூரில் மகள் தாயாரை கொலை செய்த பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
35 வயதான மகளே அவரது தாயாரை இவ்வாறு கொலை செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மகளுக்கும் தாயாரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகள் தாயாரை குத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கு தூக்க மாத்திரைகளை ஊட்டி தாயாரை கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் கொலை இடம்பெற்ற வேளை வீட்டில் பெண்ணின் மாமியார் மாத்திரம் இருந்துள்ளதுடன் அவர் பக்கத்து அறையில் இருந்ததாகவும் அவருக்கு தெரியாத விதமாக தாயாரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் அந்த பெண்ணிடம் விசாரணைகளை நடத்திய பின்னர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்