தாயாக கரங்கொடுப்போம் என்ற தொனிப் பொருளில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 

வறுமை கோட்டின் வாழும் மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரையம்பதி கிராம சேவகர் அலுவலக வளாகத்துக்குள் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆலோசனைக்கு அமைவாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூவாலப்பிள்ளை பிரசாந்தன் இதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கட்சியின் மகளிர் அணி செயலாளர், கிராம சேவகர், கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.