தாமரை குளத்திற்குள் பாய்ந்த லொறி: 3 பேர் காயம்

இந்தியாவில் புதுக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு தக்காளி லோடு ஏற்றி வர சென்ற லொறி, மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த தாமரை குளத்துக்குள் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லொறி சாரதி உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் வெளியே வந்த நிலையில், 2 கிரேன்கள் மூலம் லொறி வெளியே மீட்கப்பட்டது. அப்போது பொலிஸார் யாரும் அங்கு இல்லாததால் கிரேன்களுக்கு அடியில் வாகன ஓட்டிகள் புகுந்து சென்று ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்