
தாமதமாக திருமணம் செய்யும் ஆண்கள்: காரணம் என்ன தெரியுமா?
சில ஆண்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தாலும் ஆண்கள் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர்.தாமதமாக திருமணம் செய்வது என்பது தவறல்ல. ஆனால், இப்படி தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்களின் ஒவ்வொரு கருத்துக்களும் வித்தியாசமானது.
ஆண்களுக்கு பின்னால் உள்ள ரகசிய காரணங்கள்
1.சரியான துணை :
சிலர் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விடுகிறார்கள். அதனால் தான் ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவர்கள் 30 வயதில் ஒரு துணையை தேர்வு செய்வதால் அந்தப் பெண்ணும் முதிர்ச்சி அடைந்தவள் இதனால் இருவரும் நன்றாக புரிதலுடன் வாழ முடியும் என்பது சில ஆண்களுடைய கருத்தாகும் .
2.சுதந்திரம் :
திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் மிக குறைவான கட்டுப்பாடுகள் மற்றும் எந்த கவலையும் இல்லாமல் எங்கும் செல்ல முடியும். அதனால் தான் இப்போதெல்லாம் ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
3.பொருளாதாரம்:
ஒவ்வொரு ஆணின் முதல் கவனம் அவனது தொழில். ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு முன் ஒரு நல்ல வேலையில் அல்லது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் பொருளாதாரம் நன்றாக இருந்தால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என ஆண்கள் நினைக்கிறார்கள்
4.பொறுப்புகள்:
இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் மனைவி, குழந்தைகளின் பொறுப்பை ஏற்க வேண்டும். சிலஆண்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவே விரும்புகிறார்கள்.
இப்படி சில காரணங்களால் தான் சில ஆண்கள் திருமணத்தை தாமதமாக செய்து கொள்ள விரும்புகிறார்கள். இப்படி இவர்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்ளுவதன் முலம் ஒரு கணவன் மனைவி இருவருக்கு இடையிலும் விட்டுக்கொடுத்து பரஸ்பர உணர்வுடன் அன்யோன்யமாக வாழ முடியும் என்பது சில ஆண்களின் தனிப்பட்ட கருத்தாக அமைகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்