
தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதய ரூபன் மீதான தாக்குதலை கண்டித்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும்இ மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதய ரூபன், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளரின் கணவரினால் தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
