
தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்
-பதுளை நிருபர்-
வெலிமடை நகரில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டை நேற்று ஞாயிற்று கிழமை இரவு தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
வெலிமடை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக நேற்று இரவு 7:30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை சோதனைக்கு உட்படுத்திய போது கெப் வண்டியின் சாரதி குடிபோதையில் இருந்ததை குறித்த பொலிஸார் அவதானித்து உள்ளார்
பின்னர் பொலிஸ் அதிகாரிகள் வண்டியில் இருந்தவர்களுடன் கெப் வண்டியை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, கெப் வண்டியில் இருந்தவர்கள் பொலிஸ் சார்ஜென்டை தாக்கிவிட்டு கெப் வண்டியுடன் தப்பிச் செல்ல முற்பட்டதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் களுபஹன தெரிவித்தார்.
வெலிமடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கெப் வண்டியையும், நிலையத்திற்கு வந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன், அங்கிருந்த மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
