தாக்குதலில் பெண் உயிரிழப்பு

கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

படோவிட்ட பிரதேசவாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது சந்தேகநபர் பெண்ணை தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைப் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.