தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்கள் பல இந்த நீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றம் மற்றும் நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யாமை போன்ற காரணங்களினாலேயே இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.