
தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்
யாழ். தொண்டமானாறு பகுதியில் நேற்று புதன் கிழமை குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
