தவறி வெடித்த துப்பாக்கி – அதிகாரிக்கு காயம்

அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்செயலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடமைக்காகத் திரும்பிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனது கைத்துப்பாக்கியைச் சோதித்துக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதிகாரியொருவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அதிகாரி உடனடியாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.