தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்ப பெண்!

 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த புதன்கிழமை  மாலை பதிவாகியுள்ளது.

மினேஸ் சங்கீதா (வயது 23) என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக அரலி விதையை அரைத்துக் குடித்து குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.