தலைவன் தலைவி 3 நாள் வசூல்

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இந்த நிலையில், உலகளவில் மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தலைவன் தலைவி திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.