
தலைமுடி வெட்டியது சரியில்லை என தந்தை திட்டியதால் உயிரை மாய்த்த மாணவன்
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தலைமுடியை விசித்திரமான முறையில் வெட்டியதாக தந்தை திட்டியதால் நேற்று செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தினேஷ் ஆதவன் என்ற இந்த மாணவன் முடிதிருத்தும் கடையில் முடியை வெட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அந்த சிகை அலங்காரம் பள்ளி மாணவனுக்கு சரியில்லை என கூறி மாணவனின் தந்தை திட்டிவிட்டு, மீண்டும் சென்று முடியை வெட்டி எடுக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது.
தலைமுடியை வெட்டச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய அவர், கழுத்தில் கயிற்றை கட்டி, அருகில் உள்ள மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
