தலைமன்னார் கடற்பரப்பில் 33 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுத்த வழமையான கண்காணிப்பு நடவடிக்கையின் போது, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்