
தலைமன்னார் கடற்பகுதியில் பெரும் தொகையான கேரள கஞ்சா பறிமுதல்
தலைமன்னார் கடற்பகுதியில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான 150 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
46 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா இந்தியாவிலிருந்து படகுமூலம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதன் உ ரிமையாளர் குறித்த பொதிகளை கடலிலே கைவிட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தலைமன்னார் வெலிபாறை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கேரள கஞ்சா தொகையானது மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
