
தலைப்பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
ஹிஜ்ரி ஆயிரத்து 445, புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது, நாட்டில் தலைபிறை தென்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை அதிகாலை முதல் புனித ரமழான் மாதத்திற்கான நோன்பை நோட்க முடியும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
