தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் பகுதியிலும், ஈரானின் ஹிர்மன்ட் பகுதியிலும் தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் தலிபான் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானும் ஆப்கானிஸ்தானும் எல்லை மோதல்களுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

தலிபான்கள் தங்களது எல்லையில் அவர்களின் கொடியை நாட்ட முயன்றபோது குறித்த மோதல் இடம்பெற்றதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.