தலங்கம – அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

தலங்கம – அக்குரேகொட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடப் பகுதிக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காருக்குள் இருந்தவாறே உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.