தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை : சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு!

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 6 ஆம் தரத்திற்கான ஆங்கிலப் பாடத் தொகுதியில் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.